மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

ரிலாக்ஸ் டைம்; வேர்க்கடலை வெஜிடபிள் சாலட்!

ரிலாக்ஸ் டைம்; வேர்க்கடலை வெஜிடபிள் சாலட்!

வேர்க்கடலையை பச்சையாக, வறுத்து, வேகவைத்து என்று பலவிதங்களில் சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் வேர்க்கடலையை சாலட் செய்து சாப்பிடுவதும் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது. அந்த வகையில் இன்று வேர்க்கடலை, வெஜிடபிள் சேர்த்து சாலட் செய்து சாப்பிட்டுப் புத்துணர்ச்சி பெறுவோம்.

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் ஊறவைத்து வேகவைத்த ஒரு கப் வேர்க்கடலையைப் போட்டு அதனுடன் கால் கப் நறுக்கிய வாழைத்தண்டு, கால் கப் நறுக்கிய வெள்ளரிக்காய், கால் கப் கேரட் துண்டுகள், இரண்டு டேபிள்ஸ்பூன் தக்காளி துண்டு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஒன்று சேர்த்து நன்றாகக் கலக்கவும். பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு தாளித்து சாலட் கலவையில் கொட்டி, நறுக்கிய இரண்டு டீஸ்பூன் நறுக்கிய மல்லித்தழை சேர்த்துப் பரிமாறவும்.

சிறப்பு

சத்தான சுவையான இந்த சாலட் அனைவருக்கும் ஏற்றது. இதில் உள்ள வைட்டமின் பி.3 மூளையின் நினைவாற்றலை துரிதப்படுத்துகிறது. மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் ஓர் ஆராய்ச்சியில், தினமும் ஒரு அவுன்ஸ் வேர்க்கடலை எடுத்துக்கொண்டால் 25% பித்தப்பையில் கல் (GallStone) உருவாவது தடுக்கப்படுவதாகவும், உடல் பருமன் குறைக்கப்படுவதாகவும் கண்டறிந்துள்ளனர்.

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

வியாழன் 1 ஜூலை 2021