மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 1 ஜூலை 2021

கிச்சன் கீர்த்தனா: உளுந்து மசாலா

கிச்சன் கீர்த்தனா: உளுந்து மசாலா

உடலைத் தூய்மைப்படுத்தி, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றும் உளுந்து பெண்களின் உடலுக்கு வலுவைத் தரும் என்பதால் அதிகம் பரிந்துரைக்கப்படுகிறது. செரிமான அமைப்பை ஆரோக்கியமாகப் பராமரிக்கவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் உதவும் இந்த உளுந்து மசாலா அனைவருக்கும் ஏற்றது.

என்ன தேவை?

முழு வெள்ளை உளுந்து - ஒரு கப்

பச்சை மிளகாய் - 2

இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

சின்னவெங்காயம் - கால் கப் (பொடியாக நறுக்கவும்)

கடுகு - கால் டீஸ்பூன்

உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

தேங்காய்த் துருவல் - கால் கப்

கறிவேப்பிலை - சிறிது

நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

முழு உளுந்தை 2 மணி நேரம் ஊறவைத்து, நீரை வடித்து மிக்ஸியில் சேர்க்கவும். பிறகு தேவையான நீர், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மையாக அரைக்கவும். இட்லித் தட்டில் நல்லெண்ணெய் தடவி, அரைத்த உளுந்து மாவை குழிகளில் ஊற்றி, ஆவியில் வேகவிட்டு எடுத்து உதிர்க்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உடைத்த உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து, இஞ்சித் துருவல், வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து வதக்கி, உதிர்த்த உளுந்தைச் சேர்த்து, பச்சை வாசனை போக கிளறவும். பிறகு, தேங்காய்த் துருவல் தூவி கிளறிப் பரிமாறவும்.இந்த உளுந்து மசாலாவை கொழுக்கட்டை நடுவே ஸ்டஃப் செய்து காரக் கொழுக்கட்டை செய்யலாம். இரு சப்பாத்திகள் நடுவே வைத்து ஸ்டஃப்டு சப்பாத்தியாக்கலாம்.

குறிப்பு

இட்லித் தட்டில் ஊற்றியதை வெந்ததும் எடுத்து கட் செய்து, அதன் மேலே கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டினால், உளுந்து டோக்ளா தயார்.

நேற்றைய ரெசிப்பி: உளுந்து இனிப்புப் பச்சடி

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 1 ஜூலை 2021