மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

மெட்ரோ ரயில் பயண அட்டையின் செல்லுபடி காலம் நீட்டிப்பு!

மெட்ரோ ரயில் பயண அட்டையின் செல்லுபடி காலம் நீட்டிப்பு!

ஊரடங்கு காலத்தில் பயன்படுத்தப்படாத மெட்ரோ ரயில் பயண அட்டையின் செல்லுபடி காலம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி பயணிகள் தங்கள் பயண அட்டையைப் புதுப்பித்துக்கொள்ளலாம்.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா தொற்று காரணமாகக் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கில் தமிழசு அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த 21ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கியது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயண அட்டை உபயோகிக்கும் பயணிகளுக்காக கொரோனாவால் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு காலமான மே 10ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை பயணிகள் பயன்படுத்தாத பயண அட்டைகளில் உள்ள பயண எண்ணிக்கையை, அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலத்தை நீட்டித்துள்ளது.

எனவே பயணிகள் தங்கள் பயண அட்டையில் உள்ள பயண எண்ணிக்கையின் அளவை நீட்டித்துக்கொள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகலாம். கொரோனா ஊரடங்கு காலத்தில் கியூ.ஆர். குறியீடு பயணச் சீட்டு மூலம் பயணம் செய்யும் பயணிகளின் பயண எண்ணிக்கை செல்லுபடியாகும் கால அளவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் நீட்டித்துத் தரப்படுகிறது” என்று அறிவித்துள்ளது.

மேலும், “மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்துப் பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தைச் சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

அனைத்து பயணிகளும் முகக்கவசத்தை சரியாக அணிந்துள்ளனரா என்பதை கண்காணிக்கக் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் கடந்த 21ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 19 பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.3,800 வசூலிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளது.

-ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

புதன் 30 ஜுன் 2021