மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பஸ்கள் இயங்கும்!

தமிழகத்தில் நாளை முதல் ஆம்னி பஸ்கள் இயங்கும்!

கொரோனா தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நேற்று (ஜூன் 29) முதல் 27 மாவட்டங்களில் அரசு பஸ் சேவை தொடங்கியுள்ள நிலையில் நாளை (ஜூலை 1) முதல் ஆம்னி பஸ் சேவை தொடங்கப்படும் என்று தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 4,000 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கு விதிக்கப்பட்டதால், ஆம்னி பஸ் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் நேற்று ஒருசில தனியார் பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்கள் நாளை முதல் இயக்க திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து பேசியுள்ள ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் அன்பழகன், “பொதுமுடக்கம் காரணமாக ஆம்னி பஸ் உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை நம்பியுள்ள தொழிலாளர் குடும்பம் வருவாய் இழந்துள்ளனர்.

எங்களது பொருளாதார சூழலைக் கருத்தில்கொண்டு ஏப்ரல், மே, ஜூன் காலாண்டு வரி விலக்கு பெரும் வகையில் பஸ்களை இயக்கப் போவதில்லை என்று ஏற்கனவே போக்குவரத்துத்துறைக்குத் தெரிவித்துள்ளோம். ஜூன் மாதம் முழுவதும் பேருந்துகளை இயக்காமல் இருந்தால்தான் வரி விலக்கைப் பெற முடியும்.

எனவே ஆம்னி பஸ்களை இயக்க முடியாத சூழ்நிலையில் அனைத்து பஸ்களும் நாளை (ஜூலை 1) முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

புதன் 30 ஜுன் 2021