மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

வன ஆக்கிரமிப்போர் மீது சட்ட நடவடிக்கை: உயர்நீதிமன்றம்!

வன ஆக்கிரமிப்போர் மீது சட்ட நடவடிக்கை: உயர்நீதிமன்றம்!

வனப்பகுதியை ஆக்கிரமிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கூடலூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், நடுவட்டம் கிராமத்தில் மருத்துவர் கவிதா செண்பகம் என்பவர், தமிழ்நாடு மலைப்பகுதியில் சட்ட விதிகளை மீறி, ரிசார்ட் கட்டி வருகிறார். அதற்காக வன நிலங்களை ஆக்கிரமித்து கட்டுமான பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கின் கடந்த முறை விசாரணையின்போது தலைமை நீதிபதி அமர்வு, உடனடியாக ஆய்வு செய்து, ஆக்கிரமிக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை மீட்க வேண்டும். ஆக்கிரமிப்பு இருந்தால் தனியார் ரிசார்ட்டுக்கு தண்ணீர் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று(ஜூன் 30) மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர், வனத்துறை அலுவலர் ஆகியோரின் அறிக்கையை தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ரிசார்ட்டுக்கு வழங்கப்பட்ட கட்டிட அனுமதி ரத்து, குடிநீர் இணைப்பு துண்டிப்பு, வனப்பகுதிக்குள் நடப்பட்ட மின்கம்பம் அகற்றம் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

வனப்பகுதி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது என்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான மருத்துவர் கவிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மீட்கப்பட்ட வனப்பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவேண்டும். வனத்தை ஆக்கிரமிக்கும் ஒவ்வொருவர் மீதும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

-வினிதா

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

புதன் 30 ஜுன் 2021