மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

ரேஷனில் மீண்டும் கைரேகை முறை!

ரேஷனில் மீண்டும் கைரேகை முறை!

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மீண்டும் கைரேகை நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு 4 ஆயிரம் ரூபாயை மே 2021 மற்றும் ஜூன் 2021 ஆகிய மாதங்களில் இரண்டு தவணைகளாக 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க அரசாணை பிறப்பித்தது. மேலும், ஜூன் 21 ஆம் தேதி நிவாரணத் தொகையுடன் 14 மளிகைப் பொருட்கள் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இதனைப் பெற நியாய விலை கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் வரும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டும், தாமதமின்றி நிவாரணத் தொகை மற்றும் மளிகை தொகுப்பினையும் பெற்று செல்ல ஏதுவாக கைவிரல் ரேகை பதிப்பின் நடவடிக்கை நிறுத்தம் செய்யப்பட்டது.

இதற்கிடையில் புதிய மின்னணு குடும்ப அட்டை கோரி அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். அரசால் அறிவிக்கப்பட்ட கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகைப் பொருட்களின் தொகுப்பு வழங்கும் பணி நடைபெறுவதாலும், புதிய மனுக்களை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கூடுதலாக நிதி ஒதுக்கீடு கோர வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும், கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக களப்பணியாளர்களால் விசாரணைக்கு செல்ல இயலாத சூழ்நிலை காரணமாகவும், தகுதியான மனுக்களை ஒப்புதல் அளிப்பதற்கான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது நிவாரண உதவித் தொகை 98.59 சதவீதமும் மற்றும் 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால், ஜூலை 1ஆம் தேதி முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைரேகை நடைமுறையை மீண்டும் செயல்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

புதன் 30 ஜுன் 2021