மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

தமிழக- புதுவை தாதாக்கள் மோதல்: கத்திக்குத்து, குண்டு வீச்சு!

தமிழக- புதுவை தாதாக்கள் மோதல்: கத்திக்குத்து, குண்டு வீச்சு!

புதுச்சேரி மற்றும் தமிழக ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து இரு மாநில போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்திலும், புதுவையிலும் புதிய ஆட்சி அமைந்து இரண்டு மாதங்கள் கூட முடியாத நிலையில் வெடிகுண்டு கலாச்சாரம் தலைதூக்க தொடங்கியுள்ளது.

தாடி அய்யனார் என்ற ரவுடி புதுச்சேரி யூனியன் பிரதேசம் மங்கலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கரிக்கலாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். இவர் மீது கொலை, வழிப்பறி, கஞ்சா மற்றும் கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு ஒரு மாதத்துக்கு முன்புதான் வெளியே வந்தார். அவர் 42 நாட்கள் ஊருக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

அதனால் தனது ஊரின் அருகில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் தமிழ்நாடு எல்லையில் இருக்கும் குமாரமங்கலம் மலட்டாறு ஓரத்தில் மீன் குட்டை பகுதியில் தங்கியிருந்தார் தாடி அய்யனார். அவர் அங்கிருப்பதை தெரிந்துக் கொண்ட, கடலூர் மாவட்டம் கீழ் குமாரமங்கலம் ரவுடி தேவா மற்றும் கரிக்கலம்பாக்கம் ஜோசப் இருவரும் நேற்று மாலையிலிருந்து தாடி அய்யனார் ரவுடியை குறிவைத்து வேவு பார்த்து வந்தனர்.

இன்று(ஜூன் 30) அதிகாலை 2 மணியளவில் குடித்துவிட்டு அசந்து தூங்கி கொண்டிருந்த அய்யனாரை தேவா ஆட்கள் தலையில் வெட்டினர். இதை தடுக்க வந்த அய்யனாரின் ஆதரவாளர் வேல்முருகனை வெட்டியதுடன், வெடிகுண்டையும் வீசியுள்ளனர். இதில் வெடிகுண்டை வீசிய தேவாவுக்கும் கையில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த இரு மாநில போலீசார்களும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதில் வெட்டு காயமடைந்த தாடி அய்யனார், வேல்முருகன் ஆகியோர் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ரவுடி தேவா, விழுப்புரம் மாவட்டம் முன்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த மோதல் குறித்து போலீசாரிடம் விசாரித்தபோது, “புதுச்சேரி கரிக்கலம்பாக்கம் பகுதியில் தாடி அய்யனாரும், ஜோசப் ஆகிய இருவரும் கூட்டாளிகளாக இருந்து வந்துள்ளனர்.

பணப்பிரச்சனையாலும், ரவுடி கூட்டத்துக்கு யார் தலைமை என்ற மோதலால் இருவரும், இரண்டு குரூப்பாக பிரிந்தனர். தாடி அய்யனார் சிறையிலிருந்து வந்ததும், அவரது ஆதரவாளர் மோட்ச ரவியை, ஜோசப் ஆட்கள் சில வாரங்களுக்கு முன்பு கொலை செய்தனர். இதனால் ஜோசப் மற்றும் அவரது ஆட்களை கொலை செய்ய திட்டமிட்டு தங்கியிருந்த போதுதான் தமிழகத்தைச் சேர்ந்த கீழ் குமாரமங்கலம் தேவா ஆதரவோடு தாடி அய்யனார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கத்திக்குத்து, வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்” என்று கூறுகிறார்கள்.

-வணங்காமுடி

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

புதன் 30 ஜுன் 2021