மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 30 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: உளுந்து இனிப்புப் பச்சடி

கிச்சன் கீர்த்தனா: உளுந்து இனிப்புப் பச்சடி

இனிப்புச் சுவையோடு குளிர்ச்சித் தன்மையையும் கொண்டிருக்கும் உளுந்தைக் கோடைக்காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். பித்தத்தைத் தணிக்க உதவும் இந்த உளுந்து இனிப்புப் பச்சடி அனைவருக்கும் ஏற்றது; ஆரோக்கியமானது.

என்ன தேவை?

முழு வெள்ளை உளுந்து - கால் கப்

புளி, உப்பு - சிறிது

பச்சை மிளகாய் - ஒன்று (நீளமாகக் கீறியது)

வெல்லம் (துருவியது) - கால் கப்

எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - கால் டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் உளுந்து, பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். கருகிவிட்டால் பச்சடியின் சுவை மாறிவிடும். வறுத்தவை ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து சிறிது தண்ணீர், புளி, உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பார்ப்பதற்கு சட்னி போல இருக்கும். இனி, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வெல்லம், தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டிப் பாகாகக் கரைய விட்டு வடிகட்டவும். பிறகு மற்றொரு வாணலியில் வடிகட்டிய பாகைச் சேர்த்து, அத்துடன் அரைத்த உளுந்து கலவையைச் சேர்த்து கிளறவும். பிறகு, தாளிக்க வேண்டியதை தாளித்து கிளறியவற்றில் சேர்த்து கலக்கவும். இனிப்பு, சிறிது புளிப்புடன் சுவையாக இருக்கும் இந்த வெல்ல உளுந்து பச்சடி.

குறிப்பு

உளுந்து பொன்னிறமாக வறுபட்டால்தான் பச்சை வாடை நீங்கும். உடனடியாக செய்து சாப்பிடவே இந்த ரெசிப்பி சிறந்தது. நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது.

நேற்றைய ரெசிப்பி: உளுந்து கீர்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

வேலைவாய்ப்பு : மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி!

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

புதன் 30 ஜுன் 2021