மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 29 ஜுன் 2021

யூடியூபர் மதனுக்கு ஜாமீன் மறுப்பு!

யூடியூபர் மதனுக்கு ஜாமீன் மறுப்பு!

யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கிய சைதாப்பேட்டை நீதிமன்றம், பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூப்பில் விளையாடும் போது, பெண்கள் மற்றும் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பேசியது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் பப்ஜி மதன் மீது சைபர் கிரைம் போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முதலில், மதன் நடத்திய யூடியூப் சேனலுக்கு நிர்வாகியாக இருந்த மதனின் மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டார். நீதிமன்ற உத்தரவுப்படி, 8 மாதக் குழந்தையுடன் ஜூன் 30ஆம் தேதிவரை காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த மதனையும் கைது செய்த போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி ஜூலை 3ஆம் தேதி வரை சிறையில் அடைத்தனர்.

பெண்கள் குறித்து ஆபாசமாக பேசியது மட்டுமில்லாமல், மக்களிடமிருந்து லட்சக் கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இருவரின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.

இந்நிலையில் மதனும், மதனின் மனைவி கிருத்திகாவும் சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை இன்று(ஜூன் 29) விசாரித்த சைதாபேட்டை நீதிமன்றம், கிருத்திகாவுடன் 8 மாத குழந்தையும் சிறையில் இருந்ததால், அவருக்கு ஜாமீன் வழங்கியது. மதனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது.

-வினிதா

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 29 ஜுன் 2021