மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

மேட்டூர் அணை: பாசனத்துக்கான நீர்திறப்பு 15,000 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணை: பாசனத்துக்கான நீர்திறப்பு 15,000 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு விநாடிக்கு 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தொடர்ந்து பெய்த தொடர்மழை காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. நேற்று முன்தினம் (ஜூன் 26) மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 8,035 கன அடியாக இருந்தது.

இந்த நிலையில் தற்போது அணையின் நீர்வரத்து குறையத் தொடங்கியுள்ளது. இதன்படி நேற்று (ஜூன் 27) மாலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 3,275 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து நேற்று காலை டெல்டா பாசனத்துக்காக விநாடிக்கு 10,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

அதே சமயம், பாசனத்துக்கான நீர் திறப்பு நேற்று (ஜூன் 27) மாலை 15,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று முன்தினம் (ஜூன் 26) 88.98 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று (ஜூன் 27) மாலை 88.43 அடியாக குறைந்தது. அணையின் மொத்த நீர் இருப்பு 51.07 டி.எம்.சியாக உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

திங்கள் 28 ஜுன் 2021