மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

கொரோனா பரவலுக்குப் பிறகு சுற்றுலாத்துறையை மேம்படுத்த 16 பேர் குழு!

கொரோனா பரவலுக்குப் பிறகு சுற்றுலாத்துறையை மேம்படுத்த 16 பேர் குழு!

கொரோனா பரவலுக்குப் பிறகு சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு மற்றும் அரசு துறை சாரா உறுப்பினர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் சுற்றுலாத்துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. உலகம் முழுவதும் கலாச்சாரம், வரலாறு, இயற்கை ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்வதில் சுற்றுலாத்துறைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு இ-பதிவு பெற்று சமூக இடைவெளி, முகக்கவசம் ஆகியவற்றை பின்பற்றி சாலை வழிப்பயணம் மேற்கொள்ள தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள கொரோனா காலகட்டத்திலும் சுற்றுலாத்துறை மீண்டு எழுவது என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில், கொரோனா தொற்றுக்குப் பிறகு சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது முக்கியமானது.

எனவே, சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசு மற்றும் அரசு துறை சாரா உறுப்பினர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. சுற்றுலா வளர்ச்சித் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி தலைமையில் இந்தக் குழு செயல்படும். குழுவில் உறுப்பினர்களாக அருங்காட்சியக துறை இயக்குநர், கலை மற்றும் கலாச்சார துறை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், தொல்லியல் துறை ஆணையர் உள்ளிட்ட 16 பேர் இடம்பெற்றுள்ளனர்.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 28 ஜுன் 2021