மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரணம்: நீதிமன்றம் கேள்வி!

மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரணம்: நீதிமன்றம் கேள்வி!

ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரண உதவிகள் குறித்த முழுமையான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என மூன்று அமைப்புகளின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் இன்று(ஜூன் 28) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "கண்பார்வை இல்லாத மாற்றுத் திறனாளிகள், ரயில்களில் பென்சில், புத்தகம் உள்ளிட்டவை விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்தனர். தற்போது ஊரடங்கு காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி அரசுக்கு பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டது. 5 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி கோரிய நிலையில், ஆயிரம் ரூபாய் மட்டுமே நிவாரணமாக வழங்கப்பட்டது. அதேசமயம், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், பொதுமக்களுக்கு 4 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”தமிழ்நாடு முழுவதும் 1,94,449 மாற்றுத் திறனாளிகளுக்காக 58 கோடியே 33 லட்சம் ரூபாய் நிவாரண உதவியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலை குறித்து அறிக்கை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்துக் கொண்ட நீதிபதிகள், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனர். எனவே தமிழ்நாடு அரசு, இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு என்னென்ன நிவாரண உதவிகள் வழங்கியுள்ளது. அத்துடன் எந்தெந்த வகையினருக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

-வினிதா

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

திங்கள் 28 ஜுன் 2021