மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 28 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: உளுந்து பிடிகொழுக்கட்டை

கிச்சன் கீர்த்தனா: உளுந்து பிடிகொழுக்கட்டை

இட்லி, தோசை இல்லாத ஒரு நாளையோ, உளுந்து வடை இல்லாத விசேஷ நாட்களையோ நினைத்துப் பார்க்க முடியுமா? இந்த மூன்றுக்கும் அடிப்படை உளுந்து. இந்தப் பண்டங்கள் அனைத்தும் கோயில் பிரசாதமாக முதலில் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சத்தான உளுந்தை அடிப்படையாகக்கொண்டு உளுந்து பிடிகொழுக்கட்டை செய்து இந்த நாளை சிறப்பாக்கலாம்.

என்ன தேவை?

முழு வெள்ளை உளுந்து - அரை கப்

சிவப்பு அவல் - கால் கப்

காய்ந்த மிளகாய் - 3

விருப்பமான காய்கறிகள் (பொடியாக நறுக்கவும்) - கால் கப்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தாளிக்க

கடுகு - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

உடைத்த உளுந்து - அரை டீஸ்பூன்

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்

எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு

எப்படிச் செய்வது?

சிவப்பு அவலை 10 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். காய்ந்த மிளகாய் மற்றும் உளுந்தை 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, தண்ணீர் இறுத்து மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்கக் கொடுத்த பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் அவலை நீர்வடித்துச் சேர்த்து புரட்டி, அரைத்த விழுது, உப்பு சேர்த்துக் கிளறவும். கலவை ஒன்றோடு ஒன்று சேர்ந்து வந்ததும் அடுப்பை அணைக்கவும். இட்லித் தட்டில் வாழையிலை போட்டு, அதில் எண்ணெய் தடவி, கிளறிய உளுந்து - காய்கறிக் கலவையை பிடிகொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவிட்டு எடுக்கவும். வாழையிலை மணத்துடன் சுவையாக இருக்கும் இந்தக் கொழுக்கட்டை.

நேற்றைய ரெசிப்பி: சமையல் சந்தேகங்களும் எளிமையான தீர்வுகளும்!

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

திங்கள் 28 ஜுன் 2021