மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

உலகளவில் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை, வேலூர் கல்லூரிகள்!

உலகளவில் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலில் சென்னை, வேலூர் கல்லூரிகள்!

உலகில் சிறந்த 100 மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி மற்றும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

CEOWORLD Magazine என்ற இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரிகள் முதல் 22 இடங்களைப் பிடித்துள்ளன. மேரிலாண்டு மாகாணத்தில் உள்ள JOHNS HOPKISN UNIVERSITY முதல் இடத்தை பிடித்துள்ளது. பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்டு மருத்துவக் கல்லூரி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி 23ஆவது இடத்தை பிடித்துள்ளது. புனேவில் உள்ள Armed Forces மருத்துவக் கல்லூரி 34ஆவது இடத்தை பிடித்துள்ளது.

வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி 49ஆவது இடத்தையும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி 64ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 59ஆவது இடத்தை பிடித்துள்ளது. வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி 72ஆவது இடத்தில் உள்ளது.

-ராஜ்

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

ஞாயிறு 27 ஜுன் 2021