மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

சென்னையில் விற்பனையாகாத ரூ.5,000 கோடி மதிப்பிலான வீடுகள்!

சென்னையில் விற்பனையாகாத ரூ.5,000 கோடி மதிப்பிலான வீடுகள்!

கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் சென்னையில் மட்டும் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான வீடுகள் விற்பனையாகாமல் உள்ளன.

கொரோனா முதல் அலையின்போது வெளிமாநில தொழிலாளர்கள் பெருமளவில் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியதால் கட்டுமானத்துறை கடந்த வருடம் அக்டோபர் வரை முடங்கியது.

வீட்டுக்கடன்களுக்கான வட்டி குறைப்பு, தனி வீடுகள் மீதான மக்களின் ஆர்வம் காரணமாக இந்த ஆண்டு கட்டுமானத்துறை எழுச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கமும், கட்டுமானப் பொருட்களின் திடீர் விலையேற்றமும் கட்டுமான நிறுவனங்களுக்குப் பெருத்த இழப்பை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக ஒரு சதுர அடிக்கான விலை 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் மட்டும் 5,000 கோடி மதிப்பிலான வீடுகள் விற்பனையாகாமல் இருப்பதாகவும் கட்டுமான நிறுவனங்கள் சந்தித்து வரும் இழப்புகளால் இந்தத் துறையில் பணியாற்றும் லட்சக்கணக்கான பொறியாளர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கட்டுமானத்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.

-ராஜ்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

ஞாயிறு 27 ஜுன் 2021