மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

இன்று ஒரே நாளில் 5,127 பேருக்கு கொரோனா!

இன்று ஒரே நாளில் 5,127 பேருக்கு கொரோனா!

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் இன்று(ஜூன் 27) ஒரே நாளில் 5,127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதையடுத்து, மொத்த எண்ணிக்கை 24,65,874 ஆக உயர்ந்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 2,904 பேர் ஆண்கள், 2,223 பேர் பெண்கள் ஆவர்.

அரசு மருத்துவமனைகளில் 64 பேர், தனியார் மருத்துவமனைகளில் 27 பேர் என இன்று மட்டும் 91 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 32,290 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று 7,159 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 42,801 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் 1,66,203 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் 248 பேரும், சென்னையில் 308 பேரும், கோவையில் 649 பேரும், ஈரோட்டில் 530 பேரும், சேலத்தில் 343 பேரும், தஞ்சையில் 244 பேரும், திருப்பூரில் 316 பேரும், கடலூரில் 122 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

ஞாயிறு 27 ஜுன் 2021