மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 27 ஜுன் 2021

பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டாஸ்!

பயிற்சியாளர் நாகராஜன் மீது குண்டாஸ்!

தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறையில் உள்ள நாகராஜன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

சென்னை நந்தனத்தைச் சேர்ந்தவர் தடகள பயிற்சியாளர் நாகராஜன். இவர் ஜிஎஸ்டி அலுவலக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பின், ப்ரைம் ஸ்போர்ட்ஸ் என்னும் பயிற்சி அகாடமி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

சமீபத்தில், கடந்த 2013ஆம் ஆண்டு தடகள பயிற்சிக்காக சென்றபோது, பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் நாகராஜன் மீது பெண் ஒருவர் பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, நாகராஜன் மீது போக்சோ உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கடந்த மே 28ஆம் தேதி கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாகராஜனின் ஜாமீன் மனுவை விசாரித்த, போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதற்கிடையில், நாகராஜன் மீது மேலும் ஆறு பெண்கள் புகார் அளித்துள்ள நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்படி, அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசியல் தலைவர்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிஷோர் கே. சுவாமி மற்றும் பாலியல் புகாரில் சிறையில் உள்ள ராஜகோபாலன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

ஞாயிறு 27 ஜுன் 2021