மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

மனைவியின் வங்கிக்கணக்கில் ரூ.60,000 கள்ள நோட்டு: கணவர் கைது!

மனைவியின் வங்கிக்கணக்கில் ரூ.60,000 கள்ள நோட்டு: கணவர் கைது!

அறந்தாங்கியில் மனைவியின் வங்கிக்கணக்கில் ரூ.60,000 கள்ள நோட்டுகளை டெபாசிட் செய்த கணவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் மனைவி ரேவதி. இவர் அந்த பகுதியில் உள்ள பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் கணக்கு வைத்துள்ளார். அந்த வங்கியின் சார்பில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதற்காக எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் எந்திரத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை வங்கி அதிகாரிகள் எடுத்து சரிபார்த்தனர். அப்போது டெபாசிட் செய்யப்பட்ட பணத்தில் ரூ.60,000 (2,000 ரூபாய் நோட்டுகள் 30) கள்ளநோட்டுகளாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் வங்கி அதிகாரிகள் எந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, இரண்டு பேர் ரூ.60 ஆயிரத்தை டெபாசிட் செய்தது தெரிய வந்தது.

இதுகுறித்து வங்கி மேலாளர் புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வங்கியில் உள்ள எந்திரத்தில் ரேவதியின் கணவர் சரவணன் (வயது 38) மற்றும் அவரது நண்பர் ரவிச்சந்திரன் (41) ஆகியோர் அந்த பணத்தை ரேவதியின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்தது தெரிய வந்தது.

அதன்பேரில் அவர்கள் இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்து புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளநோட்டுக்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது, இதில், யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜ்

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

சனி 26 ஜுன் 2021