மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

24 மணி நேரத்துக்குள் போலி கணக்குகள் முடக்கம்!

24 மணி நேரத்துக்குள் போலி கணக்குகள் முடக்கம்!

'சமூக வலைதளங்களில் போலி கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களோ அல்லது அவர்கள் சார்பாகவோ புகார் அளிக்கப்பட்டால், 24 மணி நேரத்துக்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும்' எனப் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உட்பட கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பெயரில் கணக்குகள் வைத்துள்ளனர். அத்தகைய பிரபலங்களின் கணக்குகளில் இருந்து புகைப்படங்களை எடுத்து, அவர்களின் பெயரில் போலியான கணக்குகளைத் தொடங்கும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது.

இது தெரியாமல் குறிப்பிட்ட பிரபலங்களின் சமூக வலைதளக் கணக்கு என தவறாக நினைத்து, அதை பலர் பின்தொடர்வதும் நடக்கிறது. சாமானியர்களின் புகைப்படங்களை திருடி, அவர்கள் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி, அவர்களின் நண்பர்கள் வட்டத்தில் பணம் கேட்டு மோசடி செய்யும் போக்குகளும், சமீபநாட்களாக அதிகரித்து உள்ளன.

இதற்கு முடிவுகட்டும் விதமாக, தகவல் தொழில்நுட்ப விதிகளில் புதிய உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி ‘ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பயனாளர்களின் பெயர்களில் துவங்கப்படும் போலி கணக்குகள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் புகார் அளித்தால், 24 மணி நேரத்துக்குள் அந்த போலி கணக்குகள் முடக்கப்பட வேண்டும்’ என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

-ராஜ்

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

சனி 26 ஜுன் 2021