மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

ஜூன் 28 முதல் விரைவு பேருந்துகள் இயக்கம்!

ஜூன் 28 முதல் விரைவு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஜூன் 28ஆம் தேதி முதல் பேருந்து சேவை தொடங்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5 வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்களை மூன்று வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வகை 3இல் உள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஏற்கனவே பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது வகை 2இல் உள்ள 23 மாவட்டங்களிலும் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வருகிற ஜூன் 28ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும்.

குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவிகித பயணிகளுடன் 27 மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கிடையேயும் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளதால், தொலைதூர பேருந்துகளும் இயங்கும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இதனால் நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு அரசு விரைவு பேருந்துகள் இயங்கும் என்றும், பேருந்துகள் இயங்கும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

சனி 26 ஜுன் 2021