மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

வேலைக்குச் செல்லும் மாணவர்கள்: பள்ளிக்கல்வித்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

வேலைக்குச் செல்லும் மாணவர்கள்: பள்ளிக்கல்வித்துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

கொரோனா காலத்தில் ஏராளமான மாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. அவர்கள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்கிற மனுவுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சார்பில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த முத்துச்செல்வம், மதுரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “கொரோனா நோய்த்தொற்று காலத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடக்கின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஆன்லைன் வகுப்புகளில் பங்கு பெறுவதிலும் பல்வேறு சிக்கல்களை மாணவர்கள் சந்தித்து வருகின்றனர்.

ஏராளமான மாணவர்கள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்லும் நிலை உள்ளது. அவர்கள் தங்களது படிப்பை பாதியில் கைவிட்டுள்ளனர். எனவே, இடைநின்ற மாணவர்கள் குறித்த கணக்கெடுப்பை முறையாகப் பராமரிக்க வேண்டும். ஆனால், இதுகுறித்த மத்திய, மாநில அரசுகளின் கணக்கெடுப்பில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அதிகாரிகள் முறையாகக் கணக்கெடுத்தால்தான் உண்மை நிலை தெரியவரும்.

பள்ளியில் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பாக கிராமங்கள், ஊரகப்பகுதிகளில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி உரிய முறையில் கணக்கெடுப்பை நடத்தும்படி அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் பலன் இல்லை.

எங்களின் மனு அடிப்படையில் இடைநின்ற 6 முதல் 18 வயதுடைய குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்தி, அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, மதுரை உயர் நீதிமன்ற நிர்வாக நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில், இந்த வழக்கு குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் சார்பில் நான்கு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை ஆறு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

சனி 26 ஜுன் 2021