மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: கொண்டைக்கடலை சாலட்!

ரிலாக்ஸ் டைம்: கொண்டைக்கடலை சாலட்!

வெள்ளரிக்காயையும் வெங்காயத்தையும் வெட்டிப் போட்டுச் சாப்பிடுவதுதான் சாலட் என நினைக்காதீர்கள். தினம் தினம் வெரைட்டியாக செய்து சாப்பிட வித்தியாசமான சாலட் ரெசிப்பி இதோ உங்களுக்கு... தினமும் சாப்பிட முடியாதவர்கள் வீக் எண்டிலாவது முயற்சி செய்யலாமே...

எப்படிச் செய்வது?

அரை கப் கொண்டைக்கடலையை ஊறவைத்து லேசாக உப்பு போட்டு வேக வைக்கவும். இரண்டு வெங்காயத்தாளின் அடியிலுள்ள வெள்ளை வெங்காயம், மூன்று நிற குடமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக அரை கப் அளவுக்கு நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயத்தாளின் பச்சை பாகத்தைப் பொடியாக நறுக்கி தனியாக வைக்கவும். அகலமான வாயுள்ள பாட்டிலில் இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில், இரண்டு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு, ஒரு பல் நறுக்கிய பூண்டு, அரை டீஸ்பூன் மிளகுத்தூள், அரை டீஸ்பூன் சில்லி ஃபிளேக்ஸ் ஆகியவற்றைப் போட்டு, மூடியைக்கொண்டு மூடி நன்றாகக் குலுக்கினால் சாலட் டிரெஸ்ஸிங் தயார்.

வேகவைத்த கொண்டைக்கடலை, நறுக்கிய காய்கறிகள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை இரண்டு டேபிள்ஸ்பூன் ஆகியவற்றை ஒரு பவுலில் போட்டு, சாலட் டிரெஸ்ஸிங்கைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளின் பச்சைப் பாகத்தை மேலே தூவிப் பரிமாறவும்.

சிறப்பு

எதையாவது சாப்பிட வேண்டும் என்று அதிகம் சாப்பிடுகிறவர்களுக்கு சரியான சாய்ஸ் இந்த சாலட். செய்வதும் எளிது. சத்துகளின் சங்கமமாகவும் இருக்கும் இந்த சாலட் வயிறும் மனதும் நிறைந்த உணர்வையும் தரும்.

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 26 ஜுன் 2021