மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 26 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: பலாக்காய் பிரியாணி

கிச்சன் கீர்த்தனா: பலாக்காய் பிரியாணி

பலாக்காயில் அதிக வைட்டமின்களும், தாதுக்களும், ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இந்தக் காயை பிரியாணியாக சமைத்து உண்ணும்போது இறைச்சியை உண்பது போன்ற உணர்வு ஏற்படும்.அத்துடன் பலாக்காய் உடலுக்கு அற்புத நன்மை பயக்கும் கார்போஹைட்ரேட் சத்துககளையும் கொண்டுள்ளது.

என்ன தேவை?

சிறிய பலாக்காய் - ஒன்று (தோல் நீக்கி, சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்)

பாசுமதி அரிசி - ஒன்றரை கப்

பெரிய வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கவும்)

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

தனியாத்தூள் (மல்லித்தூள்) - அரை டீஸ்பூன்

பிரியாணி மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

புதினா இலைகள் - கைப்பிடியளவு

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

தயிர் - ஒன்றரை கப்

பிரிஞ்சி இலை - 2

கறுப்பு ஏலக்காய் - 4

பட்டை - ஒரு துண்டு

லவங்கம் - 6

பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)

நெய் - 4 டேபிள்ஸ்பூன்

ரோஸ் வாட்டர், குங்குமப்பூ - சிறிதளவு

முந்திரி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு நறுக்கிய பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பிறகு, பலாக்காய் துண்டுகள் சேர்த்துப் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நான்கு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இதனுடன் ஒரு டீஸ்பூன் நெய், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, கறுப்பு ஏலக்காய், உப்பு சேர்த்து மேலும் கொதிக்கவிடவும். பிறகு அரிசியைப் போட்டு வேகவிடவும். முக்கால் வேக்காடு பதத்துக்கு வெந்ததும் வடித்து ஆறவிடவும். உதிர் உதிராக வைத்துக்கொள்ளவும்.

அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள நெய்யை விட்டு முந்திரி சேர்த்து வறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், பலாக்காய்த் துண்டுகள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் (மல்லித்தூள்), பிரியாணி மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, புதினா இலைகள், இஞ்சி - பூண்டு விழுது, தயிர் சேர்த்து வதக்கி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தைப் சேர்க்கவும், அதன் மேல் வதக்கிய பலாக்காய் மசாலா, பொரித்த வெங்காயம் என்று வரிசையாக அடுக்கி சிறிதளவு தண்ணீர், ரோஸ் வாட்டர், குங்குமப்பூ சேர்த்து ‘தம்’ போட்டு இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: பலாக்காய் கபாப்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்: நாகர்ஜுனா

4 நிமிட வாசிப்பு

சமந்தாதான் விவாகரத்து கேட்டார்:  நாகர்ஜுனா

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ப்ரீபெய்ட் பயனாளிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!

சனி 26 ஜுன் 2021