மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் பலி!

டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் பலி!

இந்தியாவில் பரவிவரும் உருமாறிய டெல்டா பிளஸ் வைரஸால் மத்தியப்பிரதேசத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வருகிற நிலையில், மாநிலங்களில் உருமாறிய டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் 40 பேர் டெல்டா பிளஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் மாதிரிகளுடன் மேலும் 14 பேரின் மாதிரிகள் போபால் ஆய்வகத்துக்கு மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ஐந்து பேருக்கு டெல்டா பிளஸ் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதில் உயிரிழந்த பெண்ணும் ஒருவர். பாதிக்கப்பட்ட மற்ற நான்கு பேரும் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் நல்ல முறையில் இருக்கிறார்கள். இறந்த பெண் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் டெல்டா பிளஸ் வைரஸ் 85 நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலை நீடித்தால் உலகம் முழுவதும் டெல்டா பிளஸ் வகை கொரோனா பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டிலும் செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து, மீண்டும் பணிக்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 25 ஜுன் 2021