மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

நவம்பர் வரை இலவச ரேஷன்!

நவம்பர் வரை இலவச ரேஷன்!

‘பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா’ திட்டத்தை மேலும் ஐந்து மாதங்களுக்கு அதாவது ஜூலை முதல் நவம்பர் வரை நீட்டிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை காரணமாக மாநிலங்கள் தனித்தனியாக பொது முடக்கத்தை அமல்படுத்தி உள்ளன. இதில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வந்தாலும், மொத்தமாக இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பவில்லை.

கொரோனா பாதிப்பு மற்றும் பொது முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு போன்றவற்றால் நாடு முழுவதும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

எனவே, இந்த மக்களுக்கு நிவாரணம் அளிக்க மத்திய அரசு திட்டம் தீட்டியது. குறிப்பாக உணவு இல்லாமல் எந்த நபரும் பாதிக்கப்படக்கூடாது என்பதை தீவிரமாக கவனத்தில் கொண்டுள்ளது. எனவே, இதற்காக இலவச ரேஷன் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது.

குறிப்பாக 80 கோடிக்கும் மேற்பட்ட ஏழை, நடுத்தர பிரிவினருக்கு வருகிற நவம்பர் மாதம் வரை மாதம் ஐந்து கிலோ உணவு தானியத்தை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. இந்தத் தகவலை பிரதமர் மோடி சமீபத்தில் அறிவித்தார். அதாவது பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை தீபாவளி வரை நீட்டிப்பதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. இதில் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை நவம்பர் மாதம் வரை நீட்டிப்பதற்கான பரிந்துரை வைக்கப்பட்டது. இதற்கு மந்திரிசபை முழு ஒப்புதல் அளித்தது.

இதுகுறித்து மத்திய அரசு பின்னர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் ஐந்து மாதங்களுக்கு அதாவது ஜூலை முதல் நவம்பர் வரை நீட்டிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அடுத்த ஐந்து மாதங்களுக்கு உணவு தானியம் இல்லாமல் எந்த ஏழையும் அவதிப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இது உதவும் எனவும் மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் 81.35 கோடி பயனாளிகள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள் எனவும், மாதந்தோறும் வழக்கமாக வழங்கப்படும் ரேஷனில் இருந்து கூடுதலாக நபர் ஒன்றுக்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் இலவமாக கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக 204 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவைப்படும் எனவும், இதற்காக மத்திய அரசுக்கு ரூ.67,266.44 கோடி செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

ராஜ்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

வெள்ளி 25 ஜுன் 2021