மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

ரூ.50 லட்சம் மண்பாண்ட பொருட்கள் தேக்கம்!

ரூ.50 லட்சம் மண்பாண்ட பொருட்கள் தேக்கம்!

கோடையில் அமோகமாக விற்பனையாகும் மண்பாண்ட பொருட்கள் கொரோனா ஊரடங்கால், போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் மானாமதுரையில் 50 லட்சம் ரூபாய் வரை தேக்கம் அடைந்துள்ளன

தமிழகத்தில் மானாமதுரை என்றாலே மண்பாண்ட தொழில் பிரசித்தம். இங்கு முந்நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இந்தத் தொழிலை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இதுதவிர இங்கு புகழ்பெற்ற கடம் தயாரிப்பு பணியும் நடைபெற்று வருகிறது.

இங்கு ஆண்டுதோறும் வரும் சீசனுக்குத் தகுந்தாற்போல் பல்வேறுவிதமான மண்பாண்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொங்கல் விழாவுக்காக பொங்கல் பானைகள் தயாரிப்பது, கோடைக்காலங்களில் வீடுகளில் தண்ணீர் ஊற்றிவைக்க பயன்படுத்தப்படும் மண்பானைகள், மண் கூஜாக்கள், அலங்கார மண்பாண்ட பொருட்களும், கார்த்திகை விழாவின்போது பல்வேறு வகையான அகல் விளக்குகள், விநாயகர் சதுர்த்தி விழாவின் போது விநாயகர் சிலைகள் தயார் செய்வது உள்ளிட்ட பணிகள் நடைபெறும்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மண்பாண்ட தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை எதுவும் இல்லாததால் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள், “ஏற்கனவே கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழில் அதன் பின்னர் அதில் இருந்து மீண்டு வந்த நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பரவல் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மிகவும் அவதிப்பட்டோம்.

தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவித்ததையடுத்து மீண்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஏற்கனவே கொரோனா ஊரடங்கு முன்பாக பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்புவதற்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான மண்பாண்ட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு இருப்பதால் மண்பாண்ட பொருட்களை விற்பனைக்கு அனுப்பி முடியாமல் உள்ளோம். அவை தேக்க நிலையில் உள்ளது.

எனவே அரசு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி எங்களை போன்றவர்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும். அது போல் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கரகம், பொங்கல் பானைகள், அகல் விளக்குகள் விற்பனை அதிகரிக்கும்” என்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் மீண்டும் பழைய இயல்பு நிலை திரும்பி கொண்டு இருக்கிறது. இதனால் மானாமதுரையில் பல இடங்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் மண்பானைகள் தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட தொடங்கியுள்ளனர்.

-ராஜ்

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 25 ஜுன் 2021