மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

பிளஸ் 2 மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை சரிபார்க்க உத்தரவு!

பிளஸ் 2 மாணவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண்ணை சரிபார்க்க உத்தரவு!

தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள், 10ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணை சரிபார்த்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் கருத்துகளின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தார்.

பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து முடிவு எடுக்க பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையிலான குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.

இந்த நிலையில், அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "2020-21ஆம் கல்வியாண்டில், பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதற்காக, அவர்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்ணை ஜூன் 25ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் சரிபார்த்து அனுப்ப வேண்டும். மாணவர்களின் மதிப்பெண்ணை சரிபார்க்கும்போது 11ஆம் வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் வழங்கிய மதிப்பெண் சான்றிதழின் பதிவு எண்களையும் சரிபார்க்க வேண்டும்.

மாணவர்களின் மதிப்பெண்ணை ஜூன் 30ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியர்கள் மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், ஜூலை 31ஆம் தேதிக்குள் மாணவர்களின் மதிப்பெண்ணை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தமிழக மருத்துவ  துறையில் பணி!

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

3 நிமிட வாசிப்பு

ஜல்லிக்கட்டு: காளை முட்டி உரிமையாளர் பலி!

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஆர்டிஓ நிறுவனத்தில் பணி!

வெள்ளி 25 ஜுன் 2021