மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 25 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: பலாக்காய் கபாப்!

கிச்சன் கீர்த்தனா: பலாக்காய் கபாப்!

பலாக்காய் கொழுப்பைக் குறைக்க உதவும் விதத்தில் அதிக நார்ச்சத்துகளையும், நன்மை அளிக்கும் கொழுப்புகளையும் கொண்டுள்ளது. கார்போஹைரேட் மற்றும் கொழுப்பைக் குறைத்து, நார்ச்சத்து, புரதம் போன்ற மற்ற சத்துகளை அதிகரித்தால் உடலின் கொலஸ்ட்ரால் அளவு எளிதில் குறைந்து விடும். அதற்கு இந்த பலாக்காய் கபாப் உதவும்.

என்ன தேவை?

பலாக்காய் - 200 கிராம் (தோல் சீவி பொடியாக நறுக்கவும்)

பனீர் - 50 கிராம்

பெரிய உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து மசிக்கவும்)

சோள மாவு (கார்ன்ஃப்ளார்) - 2 டேபிள்ஸ்பூன்

மைதா மாவு - 2 டேபிள்ஸ்பூன்

பிரெட்தூள் - அரை கப்

பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தனியாத்தூள் (மல்லித்தூள்), சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள் - தேவையான அளவு

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு (பொடியாக நறுக்கவும்)

தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்

உடைத்த முந்திரி, உலர்திராட்சை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய பலாத்துண்டுகள் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். ஆறிய பின் தண்ணீரை வடிக்கவும். அந்தப் பாத்திரத்தில் வெந்த பலாத்துண்டுகளுடன் பனீர், மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், தனியாத்தூள் (மல்லித்தூள்), சீரகத்தூள், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை, இஞ்சி, உடைத்த முந்திரி, உலர்திராட்சை சேர்த்துக் கலந்து பிசையவும். மாவை விருப்பமான வடிவத்தில் செய்து வைக்கவும். இதுதான் கபாப்.

மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர்விட்டு தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும். செய்து வைத்துள்ள கபாப்களை மைதா மாவில் முக்கி எடுத்து பிரெட் தூளில் புரட்டி சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு கபாப்களைப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். கொத்தமல்லிச் சட்னி, புளிச்சட்னி, சாஸ் உடன் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: பலாப்பழ அடை

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 25 ஜுன் 2021