மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 ஜுன் 2021

ரூ.1000 பஸ் பாஸ் விநியோகம் நீட்டிப்பு!

ரூ.1000 பஸ் பாஸ் விநியோகம் நீட்டிப்பு!

தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வழங்கப்படும் 1000 ரூபாய் பஸ் பாஸ் வரும் ஜூன் 26 ஆம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்க ஆயிரம் ரூபாய் மாதாந்திர பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இந்த பாஸ் பெற்றவர்கள், மாநகர பேருந்துகள் முழுவதிலும் எங்கு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்து கொள்ளலாம். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், ஒவ்வொரு மாதமும் விருப்பம்போல் பயணம் செய்யும் மாதாந்திர சலுகை பயண அட்டையானது (ரூ.1000), 29 மையங்களில் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று இல்லாத காலங்களில், ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 140 லட்சம் பயண அட்டைகள் விற்பனை செய்யப்பட்டன. கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக, கடந்த மே 10 ஆம் தேதி முதல் ஜூன் 20ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது, நோய்த் தொற்று பெருமளவு குறைக்கப்பட்டு, பேருந்துகளை இயக்க தமிழ்நாடு முதல்வர் உத்தரவிட்டதின்படி, கடந்த 21 ஆம் தேதி முதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கடந்த 21ஆம் தேதியன்று மாநகர் போக்குவரத்துக் கழக மத்தியப் பணிமனையில் ஆய்வு மேற்கொண்ட பின், செய்தியாளர்களை சந்தித்தவர், மே மாதம் வாங்கிய ரூ.1000 பஸ் பாஸ் ஜூலை 15ஆம் தேதிவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும், இந்த மாதம் வழங்கப்படும் பயண அட்டையை விநியோகிக்கும், கால அவகாசத்தை நீட்டித்து வழங்கிடுமாறு பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் வந்தது. இந்த வேண்டுகோளை ஏற்று, வரும் 26ஆம் தேதிவரை மாநகர் போக்குவரத்து கழகத்தின் 29 மையங்களிலும் ரூ.1000 பஸ் பாஸை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வியாழன் 24 ஜுன் 2021