மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: முட்டைகோஸ் சூப்!

ரிலாக்ஸ் டைம்: முட்டைகோஸ் சூப்!

டென்ஷனிலிருந்து விடுபட யோகா, தியானம், உடற்பயிற்சிப் போன்றவை பெருமளவில் உதவிபுரிந்தாலும், இதிலிருந்து நாம் முழுமையாக விடுபட மன அழுத்தம் நீக்கும் உணவு வகைகளையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு இந்த முட்டைகோஸ் சூப் உதவும்.

எப்படிச் செய்வது?

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயைப் போட்டு சூடானதும் சிறிதளவு பிரெட் துண்டுகளைப் போட்டு வறுத்துத் தனியே வைக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று, ஒரு கப் முட்டைக்கோஸை வதக்கி, ஒரு கப் தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய நீரில், அரை கப் பால், இரண்டு டீஸ்பூன் சோளமாவு கரைசலைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். ஒரு கொதி வந்ததும் இரண்டு டீஸ்பூன் மிளகுத்தூள், இரண்டு டேபிள்ஸ்பூன் நறுக்கிய மல்லித்தழை தூவி இறக்கவும். பரிமாறும் முன் பிரெட் துண்டுகளைச் சேர்க்கவும்.

சிறப்பு

வைட்டமின் கே நிறைந்துள்ளது. அல்சைமர் எனும் மறதிநோயைக் கட்டுப்படுத்தும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், மார்பகம், குடல் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் கரைத்து, இதயத்தைப் பாதுகாக்கும். புத்துணர்ச்சி தரும்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 24 ஜுன் 2021