மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 24 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: பலாப்பழ அடை

கிச்சன் கீர்த்தனா:  பலாப்பழ அடை

பலாப்பழத்தில் இருக்கிற வைட்டமின் ‘சி’ நம்முடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கொரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் பலாப்பழ அடை செய்து சாப்பிடுங்கள். இதிலிருக்கிற வைட்டமின் ’ஏ’ கண்களுக்கும் சருமத்துக்கும் நல்லது. இளமையையும் நீட்டிக்க உதவும்.

என்ன தேவை?

பலாச்சுளைகள் - 8 (பொடியாக நறுக்கவும்)

வெல்லத்தூள் - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

பச்சரிசி - ஒன்றரை கப்

தண்ணீர் - இரண்டே கால் கப்

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

நெய் - 2 டீஸ்பூன்

உப்பு - ஒரு சிட்டிகை

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் அரிசியை வறுத்து பவுடராகப் பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்த பின்பு இறக்கி வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லக் கரைசலுடன் தேங்காய்த் துருவல், பலாச்சுளைகள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது சிறிதளவு நெய் சேர்த்துக் கலந்து கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.

மற்றொரு பாத்திரத்தில் இரண்டே கால் கப் தண்ணீர், உப்பு, நெய் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதில் அரைத்த அரிசியை சிறிது சிறிதாகச் சேர்த்து மிதமான தீயில் கட்டி தட்டாமல் கிளறி இறக்கவும். ஆறிய பின் நன்கு பிசையவும். பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, வாழை இலையில் வைத்து வட்டமாகத் தட்டவும். நடுவில் சிறிதளவு பூரணம் வைத்து மடித்து, ஆவியில் வேகவைத்து (இட்லிப்பானையில் புட்டு வேக வைப்பது போல) எடுக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: பலாக்கொட்டை மசாலா ரோஸ்ட்

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

வியாழன் 24 ஜுன் 2021