மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்களில் பணம் எடுக்க தடை!

டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்களில் பணம் எடுக்க தடை!

எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் பணம் திருடப்பட்டதைத் தொடர்ந்து, டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தரமணி, வடபழனி, வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் டெபாசிட் ஏடிஎம்களில் சென்சாரை மறைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வடமாநில கொள்ளை கும்பல் பணத்தைத் திருடியது.

இதைத் தொடர்ந்து ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, பணம் டெபாசிட் செய்யும் எந்திரத்தில் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி ரூ.10,000 வீதம் 15 முறை மொத்தம் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்துச் சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் தீவிரமாக ஆய்வு செய்ததில் அவர்கள், நூதன முறையில் அந்தப் பணத்தை திருடியது தெரிந்தது.

இதுகுறித்து பேசியுள்ள மத்திய குற்றப்பிரிவின், வங்கி மோசடி பிரிவின் போலீஸ் உயரதிகாரி ஒருவர், “சென்னையில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் மையங்களில்தான் இந்த நூதன மோசடி நடந்திருப்பதாக வங்கி நிர்வாகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. பணத்தை டெபாசிட் மற்றும் பணம் எடுக்கும் வசதியுள்ள கேடிஎம் (Cash Deposit Machine) இயந்திரங்களில் ஏடிஎம் கார்டுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பணம் வந்தவுடன் அதை உடனடியாக எடுக்க மாட்டார்கள்.

பணம் எடுக்கவில்லை என்றால் குறிப்பிட்ட நிமிடத்துக்குப்பிறகு அது மீண்டும் இயந்திரத்துக்குள் உள்ளே சென்றுவிடும். பணம் உள்ளே செல்வதற்கு சில நொடிகளுக்கு முன் இயந்திரத்தில் உள்ள சென்சாரையும் ஷட்டரையும் விரல்கள் மூலம் மோசடி கும்பல் தடுத்து நிறுத்தி, பணத்தை எடுத்திருக்கிறது. ஆனால், சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் பணம் எடுக்கவில்லை என்று மெஸேஜ் வரும். இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பணத்தை எடுத்து லட்சக்கணக்கில் வங்கிக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தக் கும்பல்.

இந்த மோசடி குறித்து ஆரம்பத்தில் வங்கி நிர்வாகத்துக்குத் தகவல் தெரியவில்லை. ஆனால் ஏடிஎம் மையங்களில் வைக்கப்படும் பணத்தையும், அதை எடுத்தவர்களின் விவரங்களையும் வங்கி நிர்வாகம் ஆய்வு செய்தபோதுதான் இந்த மோசடி நடப்பது தெரியவந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் டெபாசிட் வசதியுடைய ஏடிஎம்களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பணம் டெபாசிட் செய்யும் ஏடிஎம்களைக் குறிவைத்து சுமார் ரூ.48 லட்சம் வரை திருடிய கொள்ளையர்கள் ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களைப் பிடிக்க தனிப்படையினர் விரைந்துள்ளனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

புதன் 23 ஜுன் 2021