மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா!

தமிழகத்தில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘பி.1.617.2’ வைரஸூக்கு டெல்டா என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது. இந்த வைரஸ்தான் இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலைக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறப்படுகிறது. மேலும், உலக சுகாதார அமைப்பு டெல்டா கொரோனாவை கவலையளிக்கக் கூடிய வைரஸாக வகைப்படுத்தியுள்ளது. தற்போது இந்த வைரஸ் உருமாறியதையடுத்து, டெல்டா பிளஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வகை வைரஸ் பரவுவதில் அதிவேகம் கொண்டது என்றும் இதன்மூலம்தான் இந்தியாவில் மூன்றாவது அலை ஏற்படும் என்றும் மகாராஷ்டிரா மருத்துவ நிபுணர்கள் குழு சமீபத்தில் எச்சரித்திருந்தது.

இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனாவால் தற்போதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சகம் நேற்று எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.

மரபியல் பரிசோதனைக்காக ஏற்கனவே கொரோனா தொற்று வந்தவர்கள், தடுப்பூசி போட்ட பிறகும் தொற்றுக்கு ஆளானவர்கள், குழந்தைகள் என 8 வகையானவர்களிடம் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரித்து அனுப்பப்பட்டன. அதில், ஒருவருக்கு டெல்டா பிளஸ் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த நபர் சென்னையைச் சேர்ந்தவரா? அல்லது வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவரா? என்பதை கண்டறிந்து வருகிறோம் . இரண்டாவது அலை முடிவுக்கு வருகிறது என மக்கள் அலட்சியம் காட்ட வேண்டாம். விழிப்புடன் இருக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

-வினிதா

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

2 நிமிட வாசிப்பு

தமிழ்நாட்டில் புதிய 13 பேருந்து நிலையங்கள்!

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

37,000 ரூபாயை தாண்டிய தங்கத்தின் விலை: காரணம் என்ன?

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

3 நிமிட வாசிப்பு

இதற்கெல்லாம் பரோல் வழங்க முடியாது: உயர் நீதிமன்றம்!

புதன் 23 ஜுன் 2021