மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: தேங்காய்ப்பால் திரட்டு!

ரிலாக்ஸ் டைம்: தேங்காய்ப்பால் திரட்டு!

பாலைச் சுண்டக் காய்ச்சி சர்க்கரை சேர்த்த இனிப்புத் தின்பண்டம் திரட்டுப்பால். பண்டிகைகளில் முக்கிய அங்கம்வகிக்கும் இந்தத் திரட்டுப்பாலை, பாலுக்குப் பதில் தேங்காய்ப்பால் கொண்டும் தயாரிக்கலாம்.

எப்படிச் செய்வது?

400 கிராம் பொடித்த கருப்பட்டியை 100 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்கவிடவும். கலவை குலாப்ஜாமுன் சிரப் பதத்துக்கு வந்தவுடன் கீழே இறக்கி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் 100 கிராம் அரிசி மாவு, 250 மில்லி தண்ணீர் மற்றும் அரை கப் தேங்காய்ப்பால் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் அடுப்பைக் குறைவான தீயில் வைத்து இக்கலவையைக் கைவிடாமல் கிளறி கொதிக்கவிடவும். கலவையானது அல்வா பதத்துக்கு வந்தவுடன் மீண்டும் அரை கப் தேங்காய்ப்பாலைச் சேர்க்கவும். பிறகு இதனுடன் கருப்பட்டி சிரப்பொரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சிறப்பு

உடலின் உள் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல... சரும ஆரோக்கியத்துக்கும் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உறுதி அளிக்கும் சிறப்பு தேங்காய்ப்பாலுக்கு உண்டு.

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 23 ஜுன் 2021