மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 23 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: பலாக்கொட்டை மசாலா ரோஸ்ட்

கிச்சன் கீர்த்தனா: பலாக்கொட்டை மசாலா ரோஸ்ட்

சுளைகளைச் சாப்பிட்டுவிட்டு ஓரமாக ஒதுக்கும் பலாக்கொட்டையில் இருக்கிற ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் நம் உடல் செல்களில் இருக்கிற கழிவுகளை நீக்கி, புற்றுநோய் வராமல் காக்கும். புற்றுநோய் இருந்தால், அந்த இடங்களில் புதிய ரத்தக்குழாய்களை உருவாக்கி புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடையாமல் பார்த்துக்கொள்கிற குணத்தில் பலாக்கொட்டையும் இனிப்புதான்.

என்ன தேவை?

முற்றிய பலாக்கொட்டை - 25

தேங்காய்ப் பல் - கால் கப்

மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை டீஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - சிறிதளவு

உடைத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்) - அரை டீஸ்பூன்

வறுத்த கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பலாக்கொட்டைகளை முக்கால் வேக்காடு பதத்துக்கு வேகவிட்டு எடுக்கவும். ஆறிய பின் தோலை உரித்து நீளவாக்கில் இரண்டாக நறுக்கி லேசாகத் தட்டவும். இதனுடன், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை, முந்திரி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மாங்காய்த்தூள் (ஆம்சூர் பவுடர்), தேங்காய்ப் பல், உப்பு சேர்த்துக் கலந்து அரை மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு ஊறவைத்த கலவையைப் போட்டு மிதமான தீயில் வறுக்கவும். இதனுடன் வறுத்த கடலை மாவைத் தூவிக் கருகாமல் கிளறி இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி: பலாப்பழ பருப்பு பாயசம்

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

8 நிமிட வாசிப்பு

ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறிகள் என்ன?

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

2 நிமிட வாசிப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் மாற்றம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

3 நிமிட வாசிப்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 21 காளைகளை அடக்கிய இளைஞர்!

புதன் 23 ஜுன் 2021