மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

தமிழ்நாட்டில் 1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: அரசு தகவல்!

தமிழ்நாட்டில் 1.13 கோடி பேருக்கு தடுப்பூசி: அரசு தகவல்!

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 13 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும், இலவச தடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை மீண்டும் நேற்று (ஜூன் 21) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழ்நாட்டில் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17ஆம் தேதி வரை ஒன்றிய அரசிடம் இருந்து ஒரு கோடியே 18 லட்சத்து 17 ஆயிரத்து 690 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஒரு கோடியே 12 லட்சத்து 88 ஆயிரத்து 648 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கல்வி, வேலைவாய்ப்புக்காக வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு, ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் 66 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

தடுப்பூசி தொடர்பான மற்றொரு வழக்கில் நேற்று பதில் மனு தாக்கல் செய்துள்ள தமிழ்நாடு அரசு, “மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். நடக்க இயலாதவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு, மாவட்ட அளவில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இவ்வழக்கு விசாரணை ஜூன் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

செவ்வாய் 22 ஜுன் 2021