மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

திருப்பதி: தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு!

திருப்பதி: தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு!

ஊரடங்கு நேரத்தில் வரமுடியாத பக்தர்கள் தற்போது திருப்பதிக்கு வர தொடங்கியுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையானை வழிபட வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக திருப்பதியில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தரிசனம் படிப்படியாக குறைக்கப்பட்டது. ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் மட்டும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

பஸ், வாகன போக்குவரத்து இல்லாததால் கடந்த மாதம் தரிசனம் செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 3,000க்குக் கீழ் குறைந்தது. இதனால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஜூன் 21) முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பஸ், கார் லாரி உள்ளிட்ட வாகன போக்குவரத்தும் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் முன்பதிவு செய்து தரிசனத்துக்கு வரமுடியாத பக்தர்கள் இந்த ஆண்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. ஊரடங்கு தளர்வு, கொரோனா பரவல் கட்டுப்பாட்டால் ஊரடங்கு நேரத்தில் வரமுடியாத பக்தர்கள் தற்போது திருப்பதிக்கு வர தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் திருமலை - திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டம் திருமலையில் உள்ள அன்னமய பவனில் நடந்தது. அந்தக் கூட்டத்தில், “கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஏழுமலையான் கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்களுக்கு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருமலை கிரீன்ஹில்ஸ் என அறிவிக்கப்பட்டதும் விரைவில் மின்சார பேட்டரி பஸ்கள் இயக்கப்படும். 100 மின்சார பஸ்களைப் புதிதாக வாங்க முதலமைச்சர், அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அதேபோல் திருப்பதியில் இருந்து திருமலைக்கு இயங்கும் தனியார் வாகனங்களின் உரிமையாளர்கள் திருப்பதி தேவஸ்தானத்தைத் தொடர்புகொண்டால் வங்கிகள் மூலம் கடன் வழங்கி, அதில் பேட்டரி வாகனங்களை வாங்க பரிந்துரை செய்யப்படும்” என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

செவ்வாய் 22 ஜுன் 2021