மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: பலாப்பழ பருப்பு பாயசம்

கிச்சன் கீர்த்தனா: பலாப்பழ பருப்பு பாயசம்

இது பலாப்பழ சீசன் என்பதால், விதவிதமான பலாப்பழ உணவுகளைச் செய்து அசத்தலாம் பலாப்பழத்தில் கலோரி அதிகம். உடலில் எனர்ஜி குறைவாக இருப்பதாக உணர்பவர்கள், உடனடியாக இந்தப் பலாப்பழ பருப்பு பாயசம் செய்து சாப்பிட உடல் புத்துணர்ச்சி பெறும்.

என்ன தேவை?

பலாச்சுளைகள் - ஒரு கப் (கொட்டை நீக்கிப் பொடியாக நறுக்கவும்)

பாசிப்பருப்பு - அரை கப்

வெல்லத்தூள் - அரை கப்

பால் - 2 கப் (காய்ச்சி ஆறவைத்தது)

உடைத்த முந்திரி, உலர்திராட்சை - தலா 10

ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை

கெட்டித் தேங்காய்ப்பால் - ஒரு கப்

தேங்காய்ப் பல் - அரை கப் (வறுக்கவும்)

நெய் - 2 டேபிள்ஸ்பூன்

எப்படிச் செய்வது?

வெறும் வாணலியில் பாசிப்பருப்பைச் சிவக்க வறுத்து, வேகவைத்துக்கொள்ளவும். அதே வாணலியில் நெய்விட்டு முந்திரி, திராட்சை, பலாச்சுளைகளைச் வறுத்து எடுத்து தனியாக வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் வெல்லத்துடன் அரை கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். அடிகனமான பாத்திரத்தில் பாலுடன் பருப்பு, வெல்லக் கரைசல் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும். இதனுடன் பலாச்சுளைகள், ஏலக்காய்த்தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி, தேங்காய்ப்பால் சேர்க்கவும். மேலே முந்திரி, திராட்சை, தேங்காய்ப் பல் சேர்த்துப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: பலாப்பழ அல்வா (கேரள ஸ்பெஷல்)

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

செவ்வாய் 22 ஜுன் 2021