மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 20 ஜுன் 2021

அனுமதியின்றி திருமணம் செய்வோர் மீது வழக்கு : ஆட்சியர் எச்சரிக்கை!

அனுமதியின்றி திருமணம் செய்வோர் மீது வழக்கு : ஆட்சியர் எச்சரிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி திருமண நிகழ்ச்சி நடத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அரவிந்த் எச்சரித்துள்ளார்.

கொரோனா காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருமண நிகழ்ச்சிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக மக்கள் கலந்து கொள்ளுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடைமுறைகள்பின்பற்றப்படுவதில்லை என புகார் தொடர்ந்து வருகிறது.

திருமணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் கொரோனா அதிகமாக பரவுகிறது என சுகாதாரத் துறை எச்சரித்திருந்தது. அதையும் மீறி திருமண நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்றுவதில்லை.

இதனால், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் கோயில்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, மண்டப உரிமையாளர்கள் மாநகராட்சியின் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். முன்கூட்டியே பதிவு செய்யப்படாமல் திருமணங்கள் நடைபெறுவது தெரியவந்தால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி அபராதம் விதித்து தேவைப்பட்டால் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதைப்போன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுத்துள்ளார். குமரி மாவட்டத்தில் தொற்று குறைந்து வருகிற வேளையில், அனுமதியின்றி திருமண நிகழ்ச்சி நடத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்ய ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

-வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

ஞாயிறு 20 ஜுன் 2021