மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

பெண் வழக்கறிஞருக்கு ஜாமீன் மறுப்பு!

பெண் வழக்கறிஞருக்கு ஜாமீன் மறுப்பு!

காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம் அவரது மகளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ஊரடங்கின்போது சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் காவலர்களை தரக்குறைவாக பேசிய புகாரில் வழக்கறிஞர் தனுஜா மற்றும் அவரது மகள் ப்ரீத்தி ஆகிய இருவர் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதுபோன்ற சம்பவத்தில் முன் ஜாமீன் வழங்கினால் தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும் என்று கூறிய நீதிபதி, அவர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டார்.

உடனடியாக, தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி,” வரம்பு மீறிய வழக்கறிஞர் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார் கவுன்சில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார். புகார்கள் இல்லாமல் தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க முடியுமா? என்றும் கேள்வி கேட்டிருந்தார்.

மீண்டும் இந்த வழக்கு இன்று(ஜூன் 18) நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் தனுஜாவின் மனுவை தள்ளுபடி செய்து ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, அவரது மகள் ப்ரீத்திக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

தவறு செய்யும் வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுதொடர்பான விதிகளை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 18 ஜுன் 2021