மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

மூன்றாம் அலை : குழந்தைகள் பாதிக்கப்படுவார்களா?

மூன்றாம் அலை : குழந்தைகள் பாதிக்கப்படுவார்களா?

கொரோனா மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என உலக சுகாதார அமைப்பும், எய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் மூன்றாம் அலை குறித்து மருத்துவ நிபுணர்களின் தொடர் எச்சரிக்கை மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இதில் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறுவதால் பயம் அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் இணைந்து ஆய்வு ஒன்று நடத்தியது. அதில் டெல்லி நகர்ப்புற மற்றும் கிராமப்புறம், புவனேஸ்வர், கோரக்பூர் மற்றும் அகர்தலா ஆகிய பகுதிகளில் 2 -17 வயதுடைய 700 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 3 ஆயிரத்து 809 பேர் என மொத்தம் 4,059 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில் குழந்தைகளிடம் வைரஸூக்கு எதிரான ஆன்டிபாடி விகிதம் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.

ஃபரிதாபாத்தில் உள்ள குழந்தைகளின் உடலில் செரோ அளவு 55.7 சதவீதமாகவும், தெற்கு டெல்லி பகுதியில் உள்ள 2-17 வயதுடைய சிறுவர்களின் உடலில் 73.9% ஆன்டிபாடிகளும், உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் கிராமப்புறத்தில் உள்ள சிறுவர்களிடம் 87.9 சதவிகிதமும், திரிபுராவில் உள்ள குழந்தைகளிடம் 51.9 சதவிகிதமும் ஆன்டிபாடி உள்ளது.

செரோ விகிதம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி விகிதம் பெரியவர்களுடன் ஒப்பிடக்கூடிய அளவில் இருப்பதால் மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மக்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 18 ஜுன் 2021