மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: மூலிகை சூப்!

ரிலாக்ஸ் டைம்: மூலிகை சூப்!

தற்போதைய சூழ்நிலையில் காபி, டீக்குப் பதிலாக சத்துகளைத் தரும் மூலிகை சூப் பக்கம் ஆர்வம் திரும்புவது நல்ல விஷயம். அதிலும் ஸ்வீட்கார்ன், ஹாட் அண்டு சோர் போன்ற சைனீஸ் சூப்களுக்குப் பதிலாக, மூலிகைகளால் தயாரான சூப் குடித்தால், அது பசியைத் தூண்டி, உடல் பலத்தைக் கூட்டி, ஏராளமான நன்மைகளை அள்ளித்தரும். வீட்டிலேயே எளிதில் செய்யக்கூடிய இந்த மூலிகை சூப் அனைவருக்கும் ஏற்றது. உடனடி புத்துணர்ச்சி தருவது.

எப்படிச் செய்வது?

கால் கப் வாழைத்தண்டை நறுக்கி, இரண்டு டீஸ்பூன் மோரில் போட்டு 10 நிமிடங்கள் வைக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் வாழைத்தண்டைப் போட்டு ஒரு கப் தண்ணீர்விட்டு வேகவிடவும். பாதி வெந்ததும் ஒரு கப் முடக்கத்தான் கீரை, தேவையான அளவு உப்பு, தலா ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம், ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்ந்து, மேலும் ஒரு கப் நீர் விட்டு வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும் மூன்று டேபிள்ஸ்பூன் நறுக்கிய கற்பூரவள்ளி இலைகளைச் சேர்க்கவும். வெந்ததும் இறக்கி, அரைத்து வடிகட்டி, கால் கப் பால், ஒரு டேபிள்ஸ்பூன் சோளமாவுக் கரைசலைச் சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதிவந்ததும் இறக்கிப் பரிமாறவும்

சிறப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 18 ஜுன் 2021