மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

இந்திய வாழைப்பழங்கள்: ரூ.619 கோடிக்கு ஏற்றுமதி!

இந்திய வாழைப்பழங்கள்: ரூ.619 கோடிக்கு ஏற்றுமதி!

வெளிநாடுகளுக்குக் கடந்த நிதியாண்டில் (2020-2021) ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாதங்களில் ரூ.619 கோடிக்கு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா.

வாழைப்பழ விளைச்சலில் உலக அளவில் முதலிடத்தில் உள்ள இந்தியா, கடந்த நிதியாண்டில் (2020-2021) ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான 11 மாதங்களில் ஒரு லட்சத்து 91,000 டன் வாழைப்பழத்தை ஏற்றுமதி செய்துள்ளது. அதன் மதிப்பு ரூ.619 கோடி ஆகும்.

உலகத்தரம் வாய்ந்த விவசாய முறைகளைப் பின்பற்றியதுதான் வாழைப்பழம் ஏற்றுமதி அதிகரிக்க காரணம் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழகத்தின் தேனி - கூடலூர் பகுதியில் விளைந்த பாரம்பரிய ரகங்களான செவ்வாழை, பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் போன்ற ரகங்களும் ஏற்றுமதி செய்ய தகுதியானவை என்றும் தமிழ்நாட்டில் வாழை சாகுபடி 96,000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 36 லட்ச டன் வாழைப் பழம் உற்பத்தி ஆகிறது. ஆகவே, இதுபோன்று ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 3-5 ரூபாய் வரை அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிட்டத்தக்கது.

தற்போது மராட்டிய மாநிலம் ஜல்கோன் மாவட்டத்தைச் சேர்ந்த ஜல்கோன் மாம்பழம் புவிசார் குறியீடு பெற்றுள்ளது. 22 மெட்ரின் டன் எடையுள்ள இந்தப் பழங்கள் துபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-ராஜ்

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

வெள்ளி 18 ஜுன் 2021