மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் குறைகளை ஆராய மனு!

பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தின் குறைகளை ஆராய மனு!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை ஆராய நிபுணர் குழு அமைக்க கோரிய வழக்கில், மனுதாரர் கூடுதல் தகவல்களைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அமலா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்று தாக்கல் செய்திருந்தார். அதில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வேலை செய்யும் இடங்களில் பாலியல் ரீதியாக பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க உள் புகார் குழு மற்றும் உள்ளூர் புகார் குழு உருவாக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில், இந்தியாவில் 655 மாவட்டங்கள் உள்ளன. இதில் 29 சதவிகித மாவட்டங்களில் மட்டுமே உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளன. 15 சதவிகித மாவட்டங்களில் அக்குழு உருவாக்கப்படவில்லை. 56 சதவிகித மாவட்டங்களில் அக்குழு இருக்கிறதா, இல்லையா என்பதே தெரியவில்லை.

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவை செயல்படாமலே இருக்கிறது. அதனால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டங்களில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக விளம்பரம் செய்தல், உள் புகார் குழு மற்றும் உள்ளூர் புகார் குழு ஆகியவற்றை மாநில அளவில் தணிக்கை செய்தல், குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியல், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பெண்களுக்கு எதிராக எத்தனை குற்றங்கள் பதிவாகியுள்ளது, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரியப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நேற்று (ஜூன் 17) நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. பொதுநல நோக்கத்தில் மனு தாக்கல் செய்துள்ள மனுதாரரைப் பாராட்டிய நீதிபதிகள், இது தற்போதைய சூழ்நிலையில் முக்கியமான வழக்கு என்பதால் மனுதாரர் கூடுதல் தகவல்களைத் திரட்டி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

-வினிதா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

வெள்ளி 18 ஜுன் 2021