மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: கோதுமை பேரீச்சைப் பணியாரம்

கிச்சன் கீர்த்தனா: கோதுமை பேரீச்சைப் பணியாரம்

பலரும் காலை நேர டிபனாகவும் மாலை நேரத்தில் சிற்றுண்டியாகவும் குழிப்பணியாரத்தை விரும்பிச் சாப்பிடுவதைப் பார்க்கலாம். அந்தவகையில் தொட்டுக்கொள்ள சைடிஷ் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும் இந்த கோதுமை பேரீச்சைப் பணியாரம்.

என்ன தேவை?

கோதுமை மாவு - ஒரு கப்

விதை நீக்கிய பேரீச்சைப் பழம் - 10

பால் - அரை கப்

பச்சரிசி மாவு - கால் கப்

சமையல் சோடா - ஒரு சிட்டிகை

எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பேரீச்சைப் பழத்தைப் பொடியாக நறுக்கவும். எண்ணெய் தவிர்த்து, இதர பொருள்களை ஒன்றாகக் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்கு வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: கம்பு - தேங்காய்ப் பணியாரம்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வெள்ளி 18 ஜுன் 2021