மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: தக்காளி - பயத்தம் பருப்பு சூப்

ரிலாக்ஸ் டைம்: தக்காளி - பயத்தம் பருப்பு சூப்

ஆரோக்கியமான உணவுகளில் சூப்புக்கென்று தனியிடம் உண்டு. சீனியர் சிட்டிசன்கள், உடல்நலம் குன்றியவர்கள், டயட் மேற்கொள்பவர்கள் ஆகியோருக்கு இது ஒரு வரப்பிரசாதம். அந்த வகையில் பலவிதமான காய்கறிகள், கீரை வகைகள், பருப்பு வகைகள், கார்ன், காராமணி, பார்லி ஆகியவற்றைக்கொண்டு ஹெல்த்தியான சூப்பை வீட்டிலேயே செய்யலாம். அதற்கு சிறந்த உதாரணம், இந்த தக்காளி – பயத்தம்பருப்பு சூப்.

எப்படிச் செய்வது?

50 கிராம் பயத்தம் பருப்பைக் குழைய வேகவிடவும். வாணலியில் இரண்டு டேபிள்ஸ்பூன் வெண்ணெயைப் போட்டு சூடானதும் நறுக்கிய வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் இரண்டு, தக்காளி இரண்டு, சோம்பு ஒரு டீஸ்பூன் சேர்த்து வதக்கி, மூன்று கப் நீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் அரைத்து வடிகட்டி, பயத்தம் பருப்பை மேலும் அரை கப் நீர் விட்டுக் கரைத்து, சோளமாவைத் தனியாகக் கரைத்து ஒரு டேபிள்ஸ்பூன் இதில் சேர்க்கவும். இதை, அடுப்பில் வைத்து ஒரு கொதிவந்ததும் இறக்கி சிறிதளவு மல்லித்தழை தூவிப் பரிமாறலாம்.

சிறப்பு

புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்தது. தக்காளி, பயத்தம் பருப்புடன் சேர்வதால், உடலில் இரும்புச்சத்து கிரகிப்பதை மேம்படுத்துகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. ஆஸ்துமா, புற்றுநோயைக் கட்டுப்படுத்துகிறது.

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

புதன் 16 ஜுன் 2021