மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

மின் கட்டணம்: மேலும் கால அவகாசம் கிடையாது!

மின் கட்டணம்: மேலும் கால அவகாசம் கிடையாது!

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. பொது முடக்கம் காரணமாக மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டதை கருத்தில்கொண்டு மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் தாழ்வழுத்த நுகர்வோர் மின் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 10 முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை இருந்த நிலையில், நேற்று (ஜூன் 15) தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அதை போலவே ஏப்ரல் மாதம் மின் கட்டணம் செலுத்தாத உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோருக்கான கூடுதல் வைப்புத் தொகையும் செலுத்த ஜூன் 15ஆம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட அவகாசம் நேற்றுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கு ஏற்கனவே போதுமான அளவு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், மின் கட்டணம் செலுத்த மேலும் கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மின் கட்டணம் செலுத்தாதவர்கள் இனி மின் வாரியத்துக்குப் பணம் செலுத்த வேண்டும் என்றால் அபராதக் கட்டணத்துடன்தான் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. ஆனால், அதற்கான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

புதன் 16 ஜுன் 2021