மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: ராகி இனிப்புப் பணியாரம்!

கிச்சன் கீர்த்தனா: ராகி இனிப்புப் பணியாரம்!

குழிப்பணியாரம் தமிழ் இலக்கியங்களிலும், தமிழர் உணவு வகைகளிலும் முக்கியமான ஒரு சிற்றுண்டி வகையாக இருந்திருக்கிறது. காரப் பணியாரம், இனிப்புப் பணியாரம் என இரண்டு வகைகளிலும் இதைத் தயாரிப்பார்கள். பண்டிகை மற்றும் திருவிழா நாள்களில் எல்லோர் வீடுகளிலும் இந்த இரண்டு வகை பணியாரங்களும் தவறாது இடம்பிடிக்கும். பண்டிகை நாட்கள் மட்டுமல்லாமல் சாதாரண நாட்களிலும் பணியாரம் சாப்பிட விரும்புபவர்கள் சத்தான இந்த ராகி இனிப்புப் பணியாரம் செய்து சாப்பிட்டு மகிழலாம்.

என்ன தேவை?

ராகி மாவு - ஒரு கப்

பச்சரிசி மாவு - கால் கப்

கருப்பட்டித்தூள் அல்லது நாட்டுச் சர்க்கரை - அரை கப்

பால் - அரை கப்

சமையல் சோடா - 2 சிட்டிகை

எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மாவு வகைகள், பால், நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டித்தூள் ஒன்றாகச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவுப் பதத்துக்கு கரைத்துவைக்கவும். சமையல் சோடா சேர்த்து லேசாக கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் அரை டீஸ்பூன் நெய் அல்லது எண்ணெய்விட்டு லேசாக காய்ந்ததும், அரை கரண்டி மாவை ஊற்றி, ஒரு நிமிடத்தில் திருப்பி விடவும். மிதமான தீயில் வைத்து நன்றாக வெந்தவுடன் பணியாரங்களை எடுத்துப் பரிமாறவும்.

நேற்றைய ரெசிப்பி: கறுப்பு உளுந்துப் பணியாரம்

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

புதன் 16 ஜுன் 2021