மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

நாளை முதல் அருட்காட்சியகங்களை மக்கள் பார்வையிடலாம்!

நாளை முதல் அருட்காட்சியகங்களை மக்கள் பார்வையிடலாம்!

ஜூன் 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்களை மக்கள் பார்வையிடலாம் என மத்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடையத் தொடங்கியது. அதிலிருந்து தினசரி பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது. உயிரிழப்பும் ஆயிரக்கணக்கில் ஏற்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தன. கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன சின்னங்கள், நினைவுச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட ஏப்ரல் 15ஆம் தேதி மத்திய தொல்லியல் துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

தற்போது கொரோனா தாக்கம் குறைந்து, தினசரி பாதிப்பு 70 ஆயிரமாக உள்ளது. பாதிப்புக்கேற்றவாறு அந்தந்த மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வருகின்றன. அதன்படி, இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்கள் வரும் 16ஆம் தேதி முதல் திறக்கப்படுகிறது.

இதுகுறித்து மத்திய தொல்லியல் துறை நேற்று (ஜூன் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாளை (ஜூன் 16) முதல் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், புராதன சின்னங்களை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்கள் நுழைவுச் சீட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களால் வெளியிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

செவ்வாய் 15 ஜுன் 2021