மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

பிளாட்பார டிக்கெட்: 94 சதவிகிதம் வருமானம் இழப்பு!

பிளாட்பார டிக்கெட்:  94 சதவிகிதம் வருமானம் இழப்பு!

பிளாட்பார டிக்கெட் விற்பனையை நிறுத்தி, பயணிகளை அனுமதிக்க மறுத்ததால் அதன்மூலம் வரும் ரயில்வேயின் வருமானம் 2020-21 நிதி ஆண்டில் 94 சதவிகிதம் சரிந்துள்ளதாக ரயில்வே துறை அளித்த பதிலில் தெரியவந்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல் காரணமாக பிரதமர் மோடி கடந்த ஆண்டு மார்ச் மாதம் முழு ஊரடங்கு அறிவித்தார். அதற்கு முன்பாகவே ரயில் நிலையங்களில் பயணிகளை வழியனுப்பவும், வரவேற்கவும் கூடுகிற கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் ரயில்வே நடவடிக்கை எடுத்தது.

ரயில் நிலைய பிளாட்பார டிக்கெட் கட்டணத்தைத் தீர்மானிக்கவும், மக்கள் நுழைவைக் கட்டுப்படுத்தவும் மண்டல மேலாளர்களுக்கு ரயில்வே துறை முதலில் அதிகாரம் வழங்கியது. அதைத் தொடர்ந்து பல ரயில்வே மண்டலங்கள் மக்கள் கூட்டம் நுழைவை மறுத்தன. பிளாட்பார டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. செல்லுபடியாகும் பயண டிக்கெட் வைத்திருப்பவர் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

ஓராண்டுக் காலம் இது அமலில் இருந்தது. பின்னர் பிளாட்பார டிக்கெட் கட்டணத்தை ரூ.10-ல் இருந்து ரூ.30 ஆகவும், பின்னர் சில மண்டலங்களில் ரூ.50 ஆகவும்கூட உயர்த்தவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு தற்காலிகமானது, கொரோனா பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டது எனக் கூறப்பட்டது.

ஆனால், பிளாட்பார டிக்கெட் விற்பனையை நிறுத்தி, பயணிகளை அனுமதிக்க மறுத்ததால் அதன்மூலம் வரும் ரயில்வேயின் வருமானம் 2020-21 நிதி ஆண்டில் 94 சதவிகிதம் சரிந்துள்ளது. இந்த தகவல், மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின்படி எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே அளித்த பதிலில் தெரிய வந்துள்ளது

2020-21 நிதி ஆண்டில் 2021 பிப்ரவரி மாதம் வரையில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையால் கிடைத்த வருமானம் ரூ.10 கோடி மட்டுமே.

2019-20 நிதி ஆண்டில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையில் கிடைத்த வருவாய் 160.87 கோடி ஆகும். இது அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் ரயில்வே ஈட்டிய அதிகபட்ச வருமானம் ஆகும்.

இதனுடன் ஒப்பிடுகையில் 2020-21 நிதி ஆண்டில் பிளாட்பாரம் டிக்கெட் விற்பனையில் 94 சதவிகிதம் ரயில்வேக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

2018-19 நிதி ஆண்டில் பிளாட்பார டிக்கெட் விற்பனை மூலம் ஈட்டிய வருமானம் ரூ.130.20 கோடி ஆக உயர்ந்தது.

தற்போது நாட்டில் புதுடெல்லி, டெல்லி சந்திப்பு, ஹஸ்ரத் நிஜாமுதீன், ஆனந்த் விகார் முனையம், மீரட் நகரம், காசியாபாத், டெல்லி சாராய் ரோஹில்லா, டெல்லி கண்டோன்மென்ட் ஆகிய எட்டு ரயில் நிலையங்களில் மட்டுமே பிளாட்பார டிக்கெட் வசதி உள்ளது.

-ராஜ்

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

செவ்வாய் 15 ஜுன் 2021